பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2019 06:35 pm
chief-minister-s-order-to-open-water-in-papanasam-chervalaru-and-manimuttaru-dams

நெல்லை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை 1,500 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட முதலமைச்சர், நீர்திறப்பின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 62,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.

மேலும், விவசாயிகள் நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close