கட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2019 09:51 pm
tamil-maanila-congress-function-worker-dead-3-people-injured

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது, சாலையில் வந்த லாரி மோதி தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர். 

திருச்சி சமயபுரம் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே.மூப்பனார் 88வது பிறந்த நாள் விவசாயிகள் தின விழாஅக்கட்சியின்  தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்காக சாலையின் இருபுறமும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்சி கொடி கட்டம் பணியில் திருச்சி பொன்நகர்பகுதியைச் சேர்ந்த சேகர் மற்றும் தொழிலாளர்கள் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். 

டாட்டா ஏஸ் வாகனத்தில் வைத்து கொடிகளை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அவ்வழியே வந்த லாரி ஒன்று  கண்ணிமைக்கும்  நேரத்தில் தொழிலாளர்களின் வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு உதவியாக  இருந்த பாலமுத்து, ஜெயராமன் மற்றும் குமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இதுகுறித்துதகவலறிந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் மதன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  காயமடைந்த மூவரும் அதே மருத்துவமனையில் தற்போது சிகிச்சை  பெற்று வருகின்றனர். இந்த விபத்து  குறித்து வழக்குப்பதிவு செய்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close