அமெரிக்க கடலோரக் காவல் படை கப்பல் சென்னை வருகை!

  கண்மணி   | Last Modified : 23 Aug, 2019 12:39 pm
america-coast-guard-ship-arrived-in-chennai-harbor

கடலோரக் காவல் படையினரின் கூட்டுப்பயிற்சிக்காக  அமெரிக்க ராணுவக்கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது. இந்திய கடற்படை சார்பாக சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்திய , அமெரிக்க கடலோர காவல்படையினர் இணைந்து சென்னை அருகே இன்று கூட்டுப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக வந்துள்ள அமெரிக்க கடற்படை கப்பல் ஸ்ட்ராட்டன்  சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இந்த கப்பலுக்கு இந்திய கடற்படை சார்பாக சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த வரவேற்பில் கையில் இந்திய மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தியபடி  பள்ளி மாணவ- மாணவிகளும்  கலந்து கொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close