வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்!

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2019 10:02 pm
nirmala-sitharaman-press-meet

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பேசினார். மேலும், நிதித்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார். 

அப்போது பேசிய அவர், "தற்போது சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. உலகப் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து தான் வருகிறது. எனவே பொருளாதார மந்தநிலை என்பது தவறான தகவல். 

பொருளாதார வளர்ச்சிக்கு நாம் பல்வேறு ஆய்வுகள் நடத்தி துணிச்சலான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த சீர்திருத்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ஜிஎஸ்டி முறையில் உரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். 

வங்கிகளுக்கு கூடுதலாக 5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும். ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு பலன்கள் அப்படியே மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கி கடன் பெறும் நடைமுறைகள் எளிதானதாக மாற்றப்படும்" என்று தெரிவித்தார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close