சிந்துவின் வெற்றி இளம்தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும்: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2019 09:05 pm
stalin-wishes-to-pvsindhu

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சுவிட்சர்லாந்தில் இன்று நடைபெற்ற உலக  பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்த நிலையில், பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் இட்ட பதிவில், ‘வரும் ஆண்டுகளில் மேலும் பல வெற்றிகள் பெற பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள். விளையாட்டில் இளம்தலைமுறையினர் சிறந்து விளங்க சிந்துவின் வெற்றி உத்வேகம் அளிக்கும்’ என்று கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close