மருத்துவர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தை தோல்வி!

  அனிதா   | Last Modified : 27 Aug, 2019 04:13 pm
doctors-strike-negotiation-fails

அரசு மருத்துவ சங்க கூட்டமைப்பினருடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

வேலைகேற்ற ஊதியம், பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. மருத்துவர்கள் போராட்டத்தினால், நோயாளிகள் பெரிதும் அவதியடைந்தனர். 

இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். சென்னை தலைமை செயலகத்தில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினருடன் சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மருத்துவர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் நீடிக்கிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close