கோவை, நீலகிரி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குதொடர்ச்சி மலை பகுதியான கோவை, நீலகிரி, தேனியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர், ஓமலூரி 4 செ.மீ, பூந்தமல்லி, செம்பரபாக்கத்தில் தலா 2 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
newstm.in