எனது நண்பர் குமரி அனந்தனின் மகளுக்கு வாழ்த்துக்கள்! - ராமதாஸ்

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2019 09:32 pm
pmk-founder-ramadoss-wishes-to-tamilisai

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பணி சிறக்க வாழ்த்துகள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். முக்கியத் தலைவர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழிசைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் 

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக எனது நண்பர் குமரி அனந்தனின் மகள் திருமதி.தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close