சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் விரைவில் தமிழில் வெளியாகும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், " உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி மாற்றம் செய்ய உதவி தேவைப்பட்டால் தமிழக அரசு உதவும் என்று தெரிவித்தார். உயர் நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியாவதற்கான பணிகளை செய்துவருவதாக தலைமை நீதிபதி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், விரைவில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியாகும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
Newstm.in