புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2019 05:26 pm
8-people-in-the-district-pudukkottai-fishermen-released

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்த்து.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை எதிர்காலங்களில் இலங்கை கடல் எல்லைக்குள் வரக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விடுலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அடுத்த வாரம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close