நாகை நம்பியார் நகரில் மீன்பிடித் துறைமுகம்

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 12:09 am
fishing-harbor-in-nagai-nambiar

நாகை நம்பியார் நகரில் ரூ.34.30 கோடி செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சுய தன்னிறைவு திட்டத்தின் கீழ் நம்பியார் நகரில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாகவும், மீனவர்களின் பங்களிப்பாக திட்ட மதிப்பீட்டின் மூன்றில் ஒரு பங்குத் தொகையான ரூ.11.43 கோடி வழங்கப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அரசாணையில், சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதன் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close