செப்.6 ல் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!

  அனிதா   | Last Modified : 04 Sep, 2019 10:37 am
cauvery-disciplinary-committee-meeting-on-september-6th

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய ஒழுங்காற்று குழுவின் 15வது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசால் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்றுக்குழுவின் 15 வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close