பள்ளி மாணவி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2019 10:44 am
school-student-commits-suicide-in-classroom

மதுரையில் பள்ளி மாணவி வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அப்பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிலேயே மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close