படகு கவிழ்ந்து விபத்து: மேலும் ஒரு மீனவர் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 08 Sep, 2019 03:54 pm
boat-topples-one-more-fisherman-death

மல்லிப்பட்டினம் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன மீனவர்களில் மேலும் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடலூரில் புதிய படகு வாங்கிவிட்டு ஊர் திரும்பியபோது, தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10 மீனவர்களும் தண்ணீரில் விழுத்தனர். செந்தில், காளீஸ்வரம் ஆகிய 2 பேர் மட்டும் உயிர் தப்பி கரைக்கு வந்து  மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நடந்தவற்றை கூறினர்.

இதையடுத்து, அதிகாரிகள் தேடும் பணியை துரிதப்படுத்தினர். இதில் 4 பேர் கடந்த 5 ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே நேற்றைய தினம் முத்துப்பேட்டை - கோடியக்கரை அருகே காணாமல் போன 2 மீனவர்களின் உடல் கரை ஒதுங்கியது. இந்நிலையில், இன்று மேலும் ஒரு மீனவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. எஞ்சிய ஒரு மீனவரை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close