அதிர்ச்சி செய்தி….மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீச்சு

  Newstm Desk   | Last Modified : 09 Sep, 2019 09:06 pm
student-acid-range-on-student

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் முன்பு மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி சுசித்ரா மீது சகமாணவர் முத்தமிழன் ஆசிட் வீசியுள்ளார். இதில் , அந்த மாணவி படுகாயம் அடைந்தார். ஆசிட் வீசிய மாணவர் முத்தமிழனை பிடித்து சக மாணவர்கள் அடித்து உதைத்ததில் அவரும் படுகாயமடைந்தார். படுகாயம் அடைந்த இருவருக்கும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்துக்கான காரணம் இன்னும் ஏதும் தெரியவரவில்லை.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close