முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு

  அனிதா   | Last Modified : 10 Sep, 2019 11:46 am
ops-meets-with-the-chief-minister

வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து வீடு திரும்பிய முதலமைச்சர் பழனிசாமியை துணை முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்தினார். 

தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி இன்று சென்னை திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் வந்து இறங்கிய முதலமைச்சருக்கு அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து கேட்டறிந்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close