பொங்கல் பண்டிகை: நாளை மறுநாள் முதல் டிக்கெட் முன்பதிவு

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2019 10:24 pm
pongal-festival-reservation-of-tickets-from-tomorrow

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் முதல் தொடங்குவதாகவும், ஜனவரி 10 ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நாளை மறுநாள் முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் காலை 8 மணி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஜனவரி 10 ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு  நாளை மறுநாள் முதலும், ஜனவரி 11 ஆம் தேதி செல்பவர்களுக்கு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜனவரி 12 ஆம் தேதி செல்பவர்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதியும், ஜனவரி 13 ஆம் தேதி செல்பவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், ஜனவரி 14 ஆம் தேதி செல்பவர்களுக்கு செப்டம்பர் 16 ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close