ஆசிரியர்களுக்கு ’கனவு ஆசிரியர்’ விருது

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2019 06:27 pm
teachers-dream-award-for-teachers

கனவு ஆசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்ற்றிக்கையில், கற்பித்தல், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. விருது பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூ.10,000 ஊக்கத்தொகையும் அளிக்கப்படும். 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் உடைய 6 பேர் வீதம் தகுதியானவர்களை பரிந்துரைக்க வேண்டும். மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை பரிசீலிக்கக்கூடாது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close