பொங்கல்- ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம். 

  அனிதா   | Last Modified : 12 Sep, 2019 08:39 am
pongal-train-ticket-booking

பொங்கல் பண்டிகையையொட்டி வெளி மாவட்டங்களுக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. 

தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அந்தவகையில், பண்டிகை நாட்களில் அதிகம் பேர் பயணம் செய்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் பல்வேறு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இன்று முதல் செப்.21 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகைக்கு முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. ஜன10 ஆம் தேதி சொந்த ஊர் செல்பவர்கள் இன்றும், ஜன11 ஆம் தேதி செல்பவர்கள் நாளையும் முன்பதிவு செய்யலாம். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close