பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டன

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 11:31 am
railway-tickets-for-pongal-festival-sold-out

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிட்டன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கும் என்று ரயில்வே நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

அதன்படி, ஜனவரி 10 ஆம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கான ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. ஒரு வாரத்திற்கு பொங்கல் விடுமுறை என்பதால் ஏராளமானோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஆன்லைனில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால், ரயில் நிலைய கவுண்டர்களில் காத்திருந்த மக்கள் டிக்கெட் கிடைக்காத்தால் ஏமாற்றம் அடைந்தனர்.

ஜனவரி 12 ஆம் தேதிக்கான முன்பதிவு 14 ஆம் தேதியும், ஜனவரி 13 ஆம் தேதிக்கான முன்பதிவு 15 ஆம் தேதியும் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close