இதுக்காக தான் நாங்க வெளிநாடு சென்றோம்: மு.க.ஸ்டாலின்

  அனிதா   | Last Modified : 12 Sep, 2019 11:27 am
this-is-why-we-went-abroad-mk-stalin

 சென்னை மெட்ரோ திட்டத்திற்கான நிதி திரட்ட தான் வெளிநாடு சென்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். அப்போது, அதிமுக கட்சியினர் நான் எதற்காக வெளிநாடு சென்றேன் என கேள்வி எழுப்புவதாக குறிப்பிட்ட அவர், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி திரட்ட வெளிநாடு சென்றதாகவும், ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நிதி சேகரிக்க சென்றதாகவும் கூறினார். 

மேலும், முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று நாங்கள் வெளிநாடு செல்லவில்லை. நான் அதிகாரிகளுடன் வெளிநாடுதான் சென்றேன். அமைச்சர்களுடன் சுற்றுலா செல்லவில்லை என விமர்சித்த அவர், தமிழகத்தில் நடைபெற்ற 2 முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் செயல்படுகின்றன. எத்தனை  பேருக்கு வேலை கிடைத்துள்ளது என கேள்வி எழுப்பினார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close