சென்னையில் அதிமுக பேனரால், விபத்தில் சிக்கி பலியான இளம்பெண்

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 06:51 pm
young-girl-killed-in-accident-by-aiadmk-banner-in-chennai

சென்னையில் அதிமுக பேனரால், இளம்பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அதிமுக பிரமுகர் அனுமதியின்றி வைத்த பேனர் அவர் மீது விழுந்தது. பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். படுகாயங்களுடன் மீட்டக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ குரோம்பேட்டை நெமிலிச்சேரியை சேர்ந்த பி.டெக் பட்டதாரி ஆவார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close