மதுரை, விருதுநகர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை!

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2019 07:39 pm
rainfall-in-several-districts-in-tn

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதேபோன்று அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மதுரை மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். ma

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close