ராணுவத்திற்கு ரூ.2000 கோடியில் தளவாடங்கள் கொள்முதல்!

  அனிதா   | Last Modified : 14 Sep, 2019 08:50 am
military-procurement-of-rs-2000-crore

இந்திய ராணுவத்திற்கு ரூ.2000 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத்தறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்திய ராணுவத்தில் பல்வேறு நவீன தளவாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலக நாடுகளில் பலம் வாய்ந்த நாடாக இந்தியா முன்னேறி வருகிறது. இந்நிலையில், இந்திய ராணுவத்தை மேலும் பலப்படுத்தும் வகையில், ரூ.2000 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத்தறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் டி72, டி90 ஆகிய பீரங்கிகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கவும், நிலத்தில் கண்ணி வெடிகளை பதிக்கும் இயந்திரங்களை டி.ஆர்.டி.ஓ.விடம் இருந்து கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close