அதிமுக கொடியில் அண்ணா படம் ஏன்? மோடி படம் போடலாமே? ஜவாஹிருல்லா

  அனிதா   | Last Modified : 15 Sep, 2019 01:49 pm
why-is-anna-s-picture-in-the-aiadmk-flag-javahirulla

அதிமுக கொடியில் அண்ணா படத்தை அகற்றிவிட்டு மோடியின் படத்தை போட்டுக் கொள்ளலாமே என மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா சாடியுள்ளார். 

கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக மக்களின் நலன்களை  பாதுகாக்காமல் மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அதிமுக அரசு, அக்கட்சியின் அதிமுக கொடியில் அண்ணாவின் படத்தை அகற்றிவிட்டு மோடியின் படத்தை போட்டுக் கொள்ளலாம் என சாடினார். 

தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற கொள்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மத்திய அரசு இந்தியை திணிப்பது நாட்டின் பன்முக தன்மையை கெடுத்துவிடும் என்றும் மத்திய அரசு இந்தி திணிப்பை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிடவில்லையெனில் மக்களோடு சேர்ந்து மனிதநேய மக்கள் கட்சி இந்தியை விரட்ட போராட்டம் நடத்தும் என கூறினார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close