10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணை வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2019 07:09 pm
the-new-release-of-the-revised-schedule-for-the-class-10-board-exam

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்திற்கு இரு தாள்கள் ஒரே தாளாக அறிவிக்கப்பட்டதால் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2020 மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 27ஆம் தேதி மொழிப்பாடம், 28ஆம் தேதி விருப்பப்பாடம், மார்ச் 31ஆம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 3 ஆம் தேதி சமூகஅறிவியல், ஏப்ரல் 7ஆம் தேதி அறிவியல், ஏப்ரல் 13ஆம் தேதி கணிதத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close