சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை..

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2019 08:54 pm
bomb-threat-in-madras-hc

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளருக்கு நாளொன்றுக்கு பல்வேறு கடிதங்கள் வருகின்றன. இந்த நிலையில், காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்த தர்ஷன் சிங் நக்பால் என்பவரின் பெயரில் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு இன்று ஒரு கடிதம் வந்துள்ளது.

அதில் செப்டம்பர் 30-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த இருப்பதாகவும், தனது மகனுடன் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்த போவதாகவும் அந்த கடிதத்தில் அந்த நபர் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் போலீசாருக்கு இந்தக் கடிதம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. கடிதத்தின் அடிப்படையில் சென்னை மாநகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close