ஹிந்தி திணிப்புக்கு எதிராக வருகிற 20ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2019 09:00 pm
dmk-meeting-on-aug-20

நாடு முழுவதும் பொது மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று கூறிய மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக திமுக மாவட்ட தலைநகரங்களில் வருகிற 20-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் இன்று மாலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாட்டின் பொது மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று கூறிய அமைச்சரின் கருத்து குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 20ம் தேதி இந்தித் திணிப்புக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close