வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு

  அனிதா   | Last Modified : 17 Sep, 2019 09:31 am
wage-hike-for-hunting-detention-officers

தமிழக அரசு வேட்டை தடுப்பு காவலர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.2500 கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 1,119 வேட்டைத்தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், மாதாந்திர தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேட்டை தடுப்புக் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை, 2,500 ரூபாய் அதிகரித்து 12,500 ரூபாயாக வழங்கப்படும் அறிவித்தார். அதன்படி இன்று ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close