தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளது.
மேலும், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கவுள்ளன. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
newstm.in