ஆணுறுப்பை அறுத்துக்கொண்டு தற்கொலை...சென்னையில் நடந்த சோகம்....!

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2019 08:37 pm
dejected-man-suicide-in-chennai

சென்னை எம்ஜிஆர் நகரில் கூலித்தொழிலாளி தனது உடல்நிலை குறித்து மனம் உடைந்து தன்னுடைய ஆணுறுப்பை அறுத்துக்கொண்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகரில் சூளைபள்ளத்தைச் சேர்ந்தவர் தினசரி கூலித்தொழிலாளியான ஆண்டனி ராஜ் 35. இவரது மனைவி பாத்திமா கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆண்டனி ராஜ் வேலையின்போது, மரத்தில் இருந்து கீழே விழுந்து அடிப்பட்டு, அதனால் வீட்டிலேயே முடங்கிப்போனதாக கூறப்படுகிறது. அவரின் மனைவியுடைய வருமானத்தில் குடும்பம் மிகவும் சிரமத்துடன் நடைபெற்று வந்தது. காலப்போக்கில்,  ஆண்டனி ராஜ் உடல்நிலை காரணமாக மனச்சோர்வடைந்தார். மேலும், தனது குடும்பத்திற்காக பங்களிக்க முடியாமல் குறித்து மனைவியிடம் அடிக்கடி கூறி வந்தார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆண்டனி ராஜ், ஷேவ் செய்ய விரும்புவதாகவும், அதற்காக ஒரு பிளேடு வாங்கி தரும்படி தனது மனைவியிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, ஆண்டனி ராஜ், பாத்ரூமிற்கு நுழைந்த சில நிமிடங்களில், உதவி வேண்டும் என்று அழுகுரல் வந்துள்ளது. உடனே பதறியடித்து கொண்டு சென்று பாத்திமா பார்க்கும்போது, ஆண்டனி ராஜ், பிளேடால் அவருடைய ஆணுறுப்பை அறுத்துகொண்டுள்ளது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண்டனிராஜ் அங்கு சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close