தீபாவளிக்கு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2019 09:45 pm
10-940-buses-operate-from-chennai-to-diwali

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தீபாவளி பண்டிகையையொட்டி, அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 10,940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 8,310 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தீபாவளி முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 4,627 பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,921 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டிவனம் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் பேருந்துகள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அக்டோபார் 6ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close