12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 01:30 pm
heavy-rain-in-12-districts-weather-center

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை மையம் தெரிவிக்கையில், ’வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. உள்தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டதுடன் காணப்படும்; மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close