சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு!

  அனிதா   | Last Modified : 21 Sep, 2019 10:16 am
chinese-president-visits-in-mamallapuram

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையையொட்டி மாமல்லபுரத்தில் தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை ஏற்று அக்டோபர் 11ஆம் இந்தியா வருகிறார். சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா வரும் சீன அதிபர் நேரடியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குகிறார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபரை வரவேற்கும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளம் செல்கின்றனர். அங்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிரதமர் மோடியும் அதிபரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

மேலும், மாமல்லபுரத்தை பார்வையிடும் சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் பிரதமர் மோடி அங்கு ஏராளமான புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவுள்ளனர்.  தலைவர்கள் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய இடங்களை தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் ஆய்வு செய்தனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close