விஜய் பேச்சை கேட்டு மக்கள் முடிவெடுக்க வேண்டியதில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

  அனிதா   | Last Modified : 21 Sep, 2019 10:57 am
people-don-t-have-to-decide-on-vijay-s-talk-minister-kadambur-raju

நடிகர் விஜய் போன்றவர்கள் பேச்சை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

பிகில் திரைப்பட ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்கவேண்டும் என கூறியிருந்தார். இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ,  மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு அவர்களை சரியாகதான் வைத்துள்ளார்கள் என்றும், விஜய் போன்றவர்கள் பேச்சை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை எனவும் கூறினார்.

மேலும், தனது படம் ஓட வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் தன்னை அறியாமல் பேசியிருப்பார் என கூறிய அமைச்சர், கடந்த தீபாவளியன்று நடிகர் விஜய்.யை முதல்வரிடம் அழைத்து சென்று பேசவில்லை என்றால் சர்க்கார் படம்  வந்திருக்காது என தெரிவித்தார். 

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்வது குறித்த அடுத்த வாரம் மீண்டு ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என கூட்டத்தில் அறிவுறுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close