தமிழகத்தில் அக்.21 இடைத்தேர்தல்!

  அனிதா   | Last Modified : 21 Sep, 2019 12:43 pm
election-date-announced

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல்  அதிகாரி அறிவித்துள்ளார். 

டெல்லியில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர், தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்.24ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தார். வேட்பு மனு தாக்கல் செப்.23 ஆம் தேதி தொடங்கி செப்.30ஆம் தேதியுடன் நிறைவடையும். மனுக்கல் மீதான பரிசீலனை அக்.1 ஆம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற அக்.3 கடை நாள் என தெரிவித்தார்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கும் அக்.21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்  என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தின் இரு தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜர் தொகுதியில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close