சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்!

  அனிதா   | Last Modified : 22 Sep, 2019 06:20 pm
inspector-shocked-by-surya-s-fans

சூர்யா ரசிகர்களின் கடிதத்தை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்  இவர்களின் தமிழை யார் காப்பான் என முகநூலில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். 

நடிகர் சூர்யா நடிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவான காப்பான் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. கடலூர் மாவட்டம் புவனகிரியில், நேற்று முன்தினம் காப்பான் படத்திற்கு சென்ற கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்றுள்ளனர். 

அவர்களை புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று "முன் அனுமதி வாங்காமல் இதுபோன்று ஊர்வலம் செல்லக் கூடாது, திரையரங்கில் பேனர் வைக்க கூடாது என்று அறிவுரை கூறியதோடு, இனிமேல் அப்படி செய்யமாட்டோம் என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுங்கள்' என்று கூறியுள்ளார். 

இதையடுத்து அந்த மாணவர்கள் கடிதம் எழுதி கொடுத்துள்ளனர். இந்த கடிதத்தை படித்த காவல் ஆய்வாளர் பெரும் அதிர்ச்சியடைந்தார். அதற்கு காரணம் அவர்கள் 6 பேரும் தமிழை பிழையுடன், தாறு மாறாக எழுதி கொடுத்ததுதான். 

இது குறித்து காவல் ஆய்வாளர் அவரது முகநூலில்.., கடிதம் எழுதிய 6 பேரும் தமிழை தப்பும் தவறுமாக எழுதிக் கொடுத்துள்ளனர். அதில் ஒரு மாணவன் ஆய்வாளர் என்பதை 'ஆவ்யாளர்'னு எழுதிருக்கான்.  "மனச திடப்படுத்திக்கிட்டுத்தான் அதை படிச்சேன். படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைச்சது. இந்த கடிதம் எழுதிய 6 பேரும் கல்லூரி படிக்கின்ற மாணவர்கள். இப்படியே நிலைமை போனால் யார் 'காப்பான்' இவர்களையும் இவர்களின் தமிழையும் ...?"  என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close