ஈரோட்டில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

  Newstm Desk   | Last Modified : 22 Sep, 2019 09:12 pm
mk-stalin-opened-karunanidhi-statue

ஈரோட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது ஓராண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்முறையாக கருணாநிதியின் பிரம்மாண்ட சிலை கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் கருணாநிதியின் சிலை ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் கருணாநிதி பல்வேறு தியாகங்களை செய்துள்ளார்.   மக்களுக்காக அவர் தனது வாழ்க்கையையே போராட்டமாக மாற்றிக் கொண்டார்' என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close