தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2019 06:54 pm
heavy-rain-in-tamil-nadu-fishermen-don-t-go-to-sea

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ’வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 3 நாட்களில் தமிழகம் நோக்கி நகருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதில், வரும் 25ஆம் தேதி கடலோரப் பகுதி, தென் தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், சேலம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. வலிமையான சூறைக்காற்று வீசும் என்பதால் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், தென் தமிழக கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’ என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close