நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2019 07:45 pm
neet-exam-forgery-case-transferred-into-cbcid

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கை தமிழக காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது தலைமறைவான உதித்சூர்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையடுத்து திருச்சி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில்  ஆள்மாறாட்டம் தொடர்பான இந்த வழக்கை தமிழக காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக உதித்சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close