டெங்கு காய்ச்சலுக்கு சென்னையில் 6 வயது சிறுமி உயிரிழப்பு 

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2019 08:39 pm
6-year-old-girl-dies-from-dengue-fever-in-chennai

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

முகப்பேரை சேர்ந்த சக்திவேல், கவிதா தம்பதியின் மகள் மகாலட்சுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சலுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், டெங்குவுக்கு சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close