37 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலுக்கு வந்த நடராஜர்: பக்தர்கள் உற்சாக வரவேற்பு

  அனிதா   | Last Modified : 24 Sep, 2019 08:57 am
natarajar-came-to-the-temple-after-37-years

37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவிலுக்கு வந்த, ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக இருந்த 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை கடந்த 1982 ஆம் ஆண்டு திருடப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இரு ஆண்டுகளில் வழக்கை முடித்துக் கொண்டனர். ஆனால் சிலை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான  போலீசாரிடம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடராஜர் சிலை 4 கண்டங்களைக் கடந்து ஆஸ்திரேலியாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் பிரிவு போலீசார் சிறப்பு அனுமதி பெற்று 37 ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜர் சிலையை மீட்டு சென்னை கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் வழக்குகள் ஒருங்கிணைத்து விசாரிக்கப்படும் கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று நடராஜர் சிலை பலத்த பாதுகாப்புடன்  நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, இன்று பலத்த பாதுகாப்புடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

ஊருக்குள் வந்த நடராஜருக்கு மக்கள் மலர் தூவி வரவேற்பளித்தனர். இதையடுத்து, கோவிலுக்குள் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. ரூ.30 கோடி மதிப்பிலான நடராஜருக்கு 24 மணி நேரமும்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close