அதிர்ச்சி: தமிழகத்தில் இரண்டு நாட்களில் மட்டும் நீரில் மூழ்கி 10 பேர் உயிரிழந்த சோகம்

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2019 02:33 pm
shock-10-people-drowned-in-tamil-nadu-in-two-days

அரியலூர் மாவட்டத்தில் ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை கழிப்பதற்காக பள்ளி மாணவர்கள் ஏரி, குளம், ஆறுகளில் சென்று குளிக்கின்றனர். இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 சிறுவர்களும், திருவாரூர் மாவட்டத்தில் 4 சிறுவர்களும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இன்று அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் நொண்டி கருப்பன் ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் ஜெகன், ஆணைமுத்து, அன்பரசன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கடந்த இருதினங்களில் மட்டும் நீரில் மூழ்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close