நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2019 09:52 pm
neet-exam-forgery

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் தேனி சிபிசிஐடி ஆய்வாளர் சித்ரா வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துளளார். 

மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வில் உதித் சூர்யா என்ற மாணவன் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உதித் சூர்யா உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யாவை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் வைத்து உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷன் மற்றும் அவரது தாயாரை தேனி தனிப்படை போலீசார் கைது செய்து சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளனர்.  உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் தேனி சிபிசிஐடி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close