தமிழ் பேசும் மோடியை தமிழக மக்கள் பாராட்ட வேண்டும்: செல்லூர் ராஜூ

  அனிதா   | Last Modified : 28 Sep, 2019 01:19 pm
narendra-modi-should-be-appreciated-sellur-raju

தமிழ் பேசும் பிரதமர் நரேந்திர மோடியை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பாராட்ட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் 10 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேனர் விபத்து மற்றும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான கேள்விக்கு, அதிமுக ஆட்சியில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

இந்திய வரலாற்றிலேயே தழிழ் மொழியை மேற்கோள் காட்டி எந்த ஒரு இந்திய பிரதமரும் பேசவில்லை என்றும், நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி ஐ.நாவில் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி பேசியது தமிழுக்கு பெருமை என்றும் குறிப்பிட்டார். மேலும், தமிழ் மொழியின் வரலாற்றை அறிந்துகொண்டதால் தான்  பிரதமர் அடிக்கடி தமிழில் பேசி வருவதாகவும், பாரத பிரதமர் நரேந்திரமோடியை தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக பாராட்ட வேண்டும் என்றும் கூறினார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close