டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் அனுமதி

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2019 09:37 am
8-people-including-4-children-with-dengue-fever-symptoms-allowed

மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் வனிதா தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த காய்ச்சல் குழந்தைகளை அதிகம் தாக்குகிறது. தமிழக அரசும் டெங்கு காய்ச்சல் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. காய்ச்சல் வந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 45 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை முதல்வர் வனிதா கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close