தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் 

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2019 03:40 pm
the-chance-of-rain-in-the-tamilnadu-fishermen-do-not-go-to-sea

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்’ என்று எச்சரித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close