குரூப்-2 தேர்வுமுறையால் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே நன்மை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் 

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2019 02:57 pm
group-2-optimization-benefits-students-who-learned-in-tamil-tnpsc-explanation

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுமுறையால் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே நன்மையை தரும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து டிஎன்பிஎஸ்சியின் செயலாளர்  நந்தகுமார் விளக்கம் அளித்தார். அதில், ‘டிஎன்பிஎஸ்சி தமிழை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. குரூப் - 2 தேர்வு முறையால் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு நன்மை தான் ஏற்படும். தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களால் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வில் தமிழக வரலாறு, பண்பாடு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குரூப்-2 தேர்வில் திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் ஆறாம் வகுப்பு பாடத்திட்டமே வடிவமைக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஒரு மாதத்தில் வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோருக்கு போதிய காலஅவகாசம் வழங்கப்படும் என்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதம் கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close