கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வை முதல்வர் தொடங்கி வைப்பார்: அமைச்சர் தகவல்

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2019 09:39 pm
minister-mafa-pandiarajan-press-meet

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நான்காம் கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியானதில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கி.பி ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களின் பழமையான நாகரிகம், பண்பாடு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஐந்தாம் கட்ட ஆய்வு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வு பணிக்கு தமிழக அரசின் சார்பில் 1.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close