தமிழர்களின் விருந்தோம்பல் சிறந்தது; பிரதமர் மோடி

  அனிதா   | Last Modified : 30 Sep, 2019 11:06 am
pm-modi-in-chennai

இட்லி, தோசை, வடை என காலை உணவளிக்கும் தமிழர்களின் விருந்தோம்பல் சிறந்தது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். 

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "சென்னையின் காலை உணவான இட்லி, தோசை, வடை உற்சாகம் தரக்கூடியது என்றும் தமிழர்களின் விரும்தோம்பல் சிறந்தது எனவும் தெரிவித்தார். சிறந்த பாரம்பரியம், கலாச்சாரம் கொண்டது தமிழ்நாடு. கற்சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரம் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது.

ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்க உதவும். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் சவாலை எதிர்கொள்ள தயங்காதவர்களே வெற்றியாளர்கள். தொழில் முன்னேற்றத்தில் சிங்கப்பூர் அரசுடன் இந்தியா இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது "என தெரிவித்தார். 

ஹேக்கத்தான் மூலம் ஒரு புதிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த கேமரா மூலம் இந்த நிகழ்ச்சியில் யார், யார் பேச்சை கவனிக்கவில்லை என்பதை கண்டுபிடிக்க முடியும். இந்த கேமராவை சட்ட சபையில் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பிரதமர் நகைச்சுவையாக பேசியதை கேட்டு, அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. 

Newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close